Vijay Sethupathi Hindi movie shooting spot has been changed

Advertisment

பிரபல இந்தி இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் மும்பை அந்தேரியில் உள்ள சித்ரகூட் படப்பிடிப்பு ஸ்டுடியோவில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திற்காக செட் அமைக்கப்பட்டிருந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="7c45d7c6-10a8-4455-9a23-f33c6f5d31c8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_29.jpg" />

இந்நிலையில் சித்ரகூட் ஸ்டுடியோவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பும் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இந்த ஸ்டூடியோவில் தான் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனைத்தொடர்ந்து சித்ரகூட் ஸ்டுடியோவிற்கு போலீசார் சீல் வைத்ததைத் தொடர்ந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.